‘நண்பனுக்காக’ பெண்ணாக மாறி ‘திருமணம்’ செய்தேன்... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய ‘புகார்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 24, 2019 10:59 PM
கல்லூரி நண்பனை பெண்ணாக மாறவைத்து திருமணம் செய்து பின்னர் ஏமாற்றியதாக இளைஞர் மீது புகார் எழுந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் மாவட்டம் பெத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். அவருக்கு அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும்போது உடன் படித்த அபிஷேக் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் இருவரும் நெருங்கிய நண்பர்களான நிலையில், கல்லூரி முடிந்ததும் அவர்கள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது இயல்பிலேயே பெண் தன்மை கொண்டவரான அபிஷேக்கிடம் நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என சந்தோஷ் கேட்டுள்ளார். முதலில் தன் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறி அதற்கு மறுத்த அபிஷேக் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன் பிறகு சில நாட்களில் திடீரென, நீ அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுமையாக பெண்ணாக மாற வேண்டும் என அபிஷேக்கை சந்தோஷ் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் வேறு வழியின்றி பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறிய அபிஷேக் தனது பெயரை அர்ச்சனா என மாற்றி வைத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு தனி வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையில் சந்தோஷ், அர்ச்சனாவை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அவருடன் வாழ மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தன்னை பெண்ணாக மாறச் செய்து, திருமணம் செய்துகொண்டு சந்தோஷ் ஏமாற்றிவிட்டதாக திருநங்கைகள் நலச்சங்கத்திலும், போலீசாரிடமும் அவர் புகார் அளித்துள்ளார்.
