கல்யாணமாகி 9 மாசம் தான்... ‘மனைவி’யிடம் பேசிவிட்டு வந்து... கவர்ன்மெண்ட் ‘டாக்டர்’ எடுத்த விபரீத முடிவு... அதிர்ந்துபோன குடும்பத்தார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 23, 2019 08:08 PM

கன்னியாகுமரி அருகே திருமணமான 9 மாதங்களில், அரசு மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newly married govt doctor committed suicide in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் லாலூ கிருஷ்ணா (28). இவர், பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும், கடந்த 9 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, ஆர்யா மேற்படிப்புக்காக அகமதாபாத் சென்றுவிட்டார்.

இதனால் மூத்த மகனான லாலூ கிருஷ்ணா, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் மனைவியுடன் செல்ஃபோனில் நீண்ட நேரம் லாலூ கிருஷ்ணா பேசியுள்ளார். பின்னர், தூங்குவதாக கூறிவிட்டு அறைக்கு சென்ற அவர், வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாலூ கிருஷ்ணாவின் சகோதரர் இரவு 8.30 மணி அளவில் அறை கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவர் அறையின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு லாலூ கிருஷ்ணா மின் விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து உறவினர்கள் உதவியுடன், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று லாலூ கிருஷ்ணாவை மீட்டார். பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். மருத்துவர் லாலூ கிருஷ்ணா சில நாட்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #DOCTOR #HUSBANDANDWIFE