'மகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை!'... 'நண்பகல் 1 மணிக்கு' மதுரை பெண்ணுக்கு நேர்ந்த 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 20, 2019 07:26 PM

மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் அப்பகுதியில் உள்ல புதுமண்டபத்தில் தையல் கடை நடத்தி வந்த இஸ்மாயில் அவ்வப்போது ஆடு அறுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.

Madurai Father arrested for killing Divorced daughter

இவருக்கு 22 வயது மகள் ரிஸ்வானா பானுவும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் ரிஸ்வானா பானுவுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணமாகியது. எனினும் கடந்த 2 வருடங்களாக ரிஸ்வானா பானு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரிஸ்வானா, கடந்த 8 மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றார். இந்நிலையில்தான், இஸ்மாயில் தனது மகள் ரிஸ்வானா பானுவுக்கு மறுமணம் செய்ய எண்ணியுள்ளார். ஆனால் இந்த மறுமணத்தில் ரிஸ்வானா பானுவுக்கு விருப்பமில்லை என தெரிகிறது.

இதன் காரணமாக எழுந்த குடும்பப் பிரச்சனையை அடுத்து, மகன் கல்லூரிக்கு சென்ற நேரமாக பார்த்து, நேற்று பகல் 1 மணி அளவில், தன் மகள் என்றும் பாராமல், ரிஸ்வானா பானுவை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு இஸ்மாயில் தலைமறைவானார். அதன் பின்னர் அவரை தல்லாகுளம் பகுதியில் கைது செய்த போலீஸார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #FATHER #DAUGHTER