நண்பர் கொடுத்த மதுவை ‘நம்பி’ குடித்தவருக்கு... ‘அடுத்த நாள்’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... இளைஞர் போட்ட ‘கொடூர’ திட்டம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 24, 2019 11:03 AM

நண்பருக்கு மது வாங்கிக் கொடுத்து சாய்த்துவிட்டு அவருடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Kanyakumari Man Arrested For Raping Friends Minor Daughter

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஒருவரும், அவருடைய நண்பரான ஆரோக்கிய ஜீன் (35) என்பவரும் வேலை முடிந்து சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஜீன் மது வாங்கிக் கொண்டு நண்பருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் மது அருந்தத் தொடங்கியதும், வீட்டில் நண்பருடைய வாய் பேச முடியாத, காது கேட்காத மனைவி மற்றும் 11வது படிக்கும் மகள் மட்டும் இருப்பதைக் கவனித்த ஜீன் கொடூர திட்டம் ஒன்றைப் போட்டுள்ளார்.

அதன்படி நண்பருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக்கொடுத்து அவரை சாய்த்துள்ளார். பின் வீட்டிற்குள் தனியாக இருந்த நண்பரின் மகளை மிரட்டிய ஜீன் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து போதை தெளிந்து காலை தந்தை எழுந்ததும் அந்தப் பெண் நடந்ததைக் கூற, அதிர்ந்துபோன அவர் உடனடியாக இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின்பேரில் ஜீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகி இருந்த ஜீனைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இதைத்தொடர்ந்து அவர் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நண்பருக்கு மது வாங்கிக் கொடுத்து சாய்த்துவிட்டு, அவருடைய மகளையே இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #RAPE #KANYAKUMARI #FRIEND #DAUGHTER #MINOR #DRINK