'இன்னைக்கு' அந்த புலியோட 'மெனு'வுல என் பையனும் இருந்திருக்கான்'!.. தந்தை போட்ட வைரல் பதிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Dec 24, 2019 03:50 PM

மிருகங்களை பார்ப்பதற்கு எந்த குழந்தைகளுக்குதான் பிடிக்காது? இயற்கையோடு ஒன்றி வாழும் குழந்தைகளுக்கு, இயற்கையோடு ஒன்றி வாழும் மிருகங்களின் மீதான ஈடுபாடே தனிதான்.

Tiger tried to assault minor boy from inside the glass

மிருகங்களின் மீது பயம் இருந்தாலும், அவர்களுக்கு மிருகங்கள் எப்போதும் செல்லக் குழந்தைகளே!. ஆனால் எல்லா மிருகங்களும் அவ்வாறு நினைக்கும் என்ன?. இப்படித்தான் அயர்லாந்து மிருககாட்சி சாலை ஒன்றுக்கு தன்னுடைய தந்தையுடன் சென்ற சிறுவன் ஒருவனை அங்கிருந்த புலி ஒன்று பாய்ந்து தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தில், டப்ளின் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு தன்னுடைய தந்தையுடன் சென்ற சிறுவன் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்ட புலியை பார்த்துள்ளார். அப்போது சிறுவனை பார்த்த புலி, ‘ஆஹா.. நமக்கு உணவு கிடைத்துவிட்டது’ என நினைத்து, பாய்ந்து தாக்க முயற்சித்து, ஆனால் நடுவில் கண்ணாடி இருந்ததால் அந்த முயற்சியில் தோல்வியுற்றது.

இதில், சிறுவன் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டான். இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த சிறுவனின் தந்தை,‘இன்று நாங்கள் சென்ற மிருகக்காட்சி சாலையில், புலியின் உணவு பட்டியலில், தனது மகனின் மகனும் இருந்துள்ளான்’ என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Tags : #TIGER #MINORBOY #FATHER