'13 வயசு பிள்ளைய கெடுத்துட்டேன்'...'எந்த பெண்ணையும் தொடமாட்டேன்'...இளைஞர் கதறும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 27, 2019 03:06 PM

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களை இனி பலாத்காரம் செய்யமாட்டேன் என,இளைஞர் ஒருவர் கதறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Sexual Harassment suspect tortured in trichy

திருச்சியில் இளைஞர் ஒருவர் சிறுமி முதல், வயதில் மூத்த  பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வகையில் புகைப்படங்கள் வெளியாகின.இதனைத் தொடர்ந்து அந்த புகைப்படங்களில் இருக்கும் இளைஞர்,தனது தலையில் காலணியை வைத்துக் கொண்டு கதறும் வகையில்,வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.அந்த வீடியோவில் பெண்களை இனி பலாத்காரம் செய்யமாட்டேன் என,அந்த இளைஞர் கதறுகிறார்.சிறிது நேரத்தில் பின்புறமாக கைகால்கள் கட்டப்பட்டு கீழே கிடந்தபடி கதறும் வீடியோ ஒன்றும் வெளியானது.

வீடியோவில் இருக்கும் இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டதால் தலை உள்ளிட்ட பாகங்களில் ரத்தம் வழிந்து, மேலும் இளைஞன் படுத்திருக்கும் பகுதி எங்கும் ரத்தம் சிதறிக் கிடக்கிறது.மேலும் வீடியோவில் இருக்கும் நபர் திருச்சி பீமநகரை சேர்ந்த மணி என தந்தி டிவியின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.இதனிடையே அந்த இளைஞன் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

Tags : #SEXUALABUSE #RAPE #TRICHY