செல்போன் மூலம் பாலியல் தொல்லை.. முதியவரை அடித்து உதைத்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 02, 2019 07:55 PM

செல்போன் மூலம் பாலியல் உறவுக்கு அழைத்து தொல்லைக் கொடுத்த முதியவரை, அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

man charged brutally abusing women on phone in madurai

மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்து, கடந்த சில மாதங்களாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல முறை அந்தப் பெண் அவரைக் கண்டித்து பார்த்தப் போதும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இது குறித்து அந்தப் பெண், தனது உறவினர்களிடம் கூறியதையடுத்து, அந்த மர்ம நபரை பிடிக்க திட்டமிட்டனர். இதனால், அந்த நபரை ஆசை வார்த்தைக் கூறி வரவழைத்த அப் பெண்ணின் உறவினர்கள், அடித்து உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் உசிலம்பட்டி சன்னாசி தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #SEXUALABUSE #MADURAI