கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தை கடத்தல்..! மர்ம கும்பலின் வெறிச்செயல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | May 17, 2019 03:43 PM

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant US woman strangled, Baby cut from her womb

அமெரிக்கா சிகாகோ நகரில் 19 வயதான ஒசாவோ லோபஸ் என்ற பெண் வசித்து வந்துள்ளார். கடந்த வருடம் திருமணம் ஆன ஒசாவோ, தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒசாவோ திடீரென காணமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியான உறவினர்கள் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ஒசாமோ அவரின் வீட்டின் அருகிலேயே சடலமாக இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் ஒசாமோவின் வயிற்றில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், ஒசாமோவின் கழுத்தை நெரித்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், அவர் உயிருக்கு போராடிய சமயத்தில் அவரின் வயிற்றை கிழித்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகநூல் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு இலவச உடைகள் வழங்குவதாக தகவல் வந்ததாகவும், அதனை வாங்க அந்த முகவரிக்கு சென்ற பின்தான் ஒசாமோ காணமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். போலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BIZARRE #AMERICA #PREGNANT #WOMEN #BABY #US