'பாதி எரிந்த நிலையில் பிணமாக தொங்கிய மாணவி'...நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 19, 2019 04:31 PM

கல்லூரி மாணவியை எரித்து மரத்தில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் அனைவரையும் பதற செய்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா,என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறர்கள்.

Girl student found half burnt and hanging from tree in Raichur

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில்,உடல் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மரத்தில் தொங்க விடபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கடந்த 16ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உடல் எரிந்த நிலையில் இருந்ததால் முதலில் அடையாளம் கண்டுப்பிடிப்பதில் சிக்கல் நீடித்தது.இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் மது என தெரியவந்தது.

மாணவி மது கடந்த 14 ஆம் தேதி காணாமல் போனதும்,அவர் நவோதயா பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.மாணவியின் உடல் கைப்பற்றப்பட்ட பகுதியிலிருந்து 'தான் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் ஒன்று சிக்கியது.

ஆனால் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர் எப்படி தூக்கில் தொங்கிய பின்பு எரிந்த நிலையில் இருப்பார் என்ற சந்தேகம் எழுந்தது.இதனிடையே மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறி கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்நிலையில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து  டிவிட்டரில் #JusticeForMadhu என்ற ஹேஷ் டாக்  டிரெண்டாகி வருகிறது.அதோடு மாணவி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags : #MURDER #SEXUALABUSE #KARNATAKA ##JUSTICEFORMADHU