'பறக்குற விமானத்துல'...'காக்பிட்டுக்குள்' இப்படி செய்யலாமா?...அதிர்ந்து போன பணிப்பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 26, 2019 01:38 PM

இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான இண்டிகோ இந்தியாவின் பல நகரங்களுக்கு தனது விமான சேவையினை வழங்கி வருகிறது.குறைந்த கட்டணத்தில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை இருப்பதனால்,அதிகமான மக்கள் இண்டிகோ விமான சேவையினை பயன்படுத்தி வருகிறார்கள்.இதனிடையே இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணிற்கு நிகழ்ந்த,பாலியல் துன்புறுத்தல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cabin crew harassed by IndiGo pilot in cockpit

கடந்த 16 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற விமானம்,நாடு வானில் பறந்து கொண்டிருந்த போது,விமானியே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பணிப்பெண் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.அதில் 'விமானம் நடு வானில் பறந்து கொண்டுருந்த போது விமானி சுடு தண்ணீர் வேண்டும் என்று கேட்டார்.இதனால் காக்பிட்டுக்கு கொண்டு சென்றேன்.அப்போது மற்றோரு விமானி கழிவறைக்கு சென்றிருந்தார்.அப்போது உள்ளே சென்ற என்னை வரவேற்ற தலைமை விமானி,அருகில் இருந்த இருக்கையில் உட்கார வைத்தார்.

உடனே தனது செல்போனில் செல்ஃபி எடுக்கலாம் என என்னிடம் நெருங்கினார். ஆனால் நான் அதனை மறுத்து விட்டேன்.இதையடுத்து மற்றோரு விமானி வருவதற்குள்,எனக்கு பாலியல் ரீதியான பல தொந்தரவுகளை அளித்தார். இதையடுத்து விமானம் அமிர்தசரஸில் நின்றது.உடனே என்னிடம் வந்து என்னுடைய மொபைல் எண்ணை கேட்டார்.நான் தரமுடியாது என மறுத்து விட்டேன்.இதையடுத்து டெல்லியில் விமானம் தரையிறங்கியது.அப்போது திடீரென அருகில் வந்த அவர் என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார்.இதையடுத்து விமானி எனக்கு கொடுத்த பாலியல் தொந்தரவுகள் குறித்து இண்டிகோ நிறுவனத்திடம் புகார் அளித்தேன்' என தெரிவித்துள்ளார்.

இதனிடையே விமான பணி பெண்ணின் புகார் குறித்து டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #FLIGHT #SEXUALABUSE #CABIN CREW #INDIGO #COCKPIT #PILOT