'தனியாக வீட்டில் இருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை'... 'வங்கி கிளை மேலாளர் அத்துமீறல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 21, 2019 11:32 AM

10-ம் வகுப்பு மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வங்கி மேலாளர் ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sexual abuse for 10th student bank branch manager arrested

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வைரவபுரத்தில் கூலி வேலை செய்யும் தாய், தந்தையுடன் வசித்து வரும் 10-ம் வகுப்பு மாணவி நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, எதிர்வீட்டில் வசிக்கும், மானகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளரான 55 வயது ரவிச்சந்திரன், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, ரவிச்சந்திரனை தள்ளிவிட்டு தப்பியுள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த மாணவி, இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரவிச்சந்திரனை அடித்து உதைத்த அப்பகுதி பொதுமக்கள், காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.

வங்கி கிளை மேலாளராகப் பணியாற்றும் ரவிச்சந்திரனுக்கு, தனலெட்சுமி எனும் மனைவியும்,  தினேஷ் மற்றும் முகேஷ் என இரு மகன்களும் உள்ளனர். அவர்கள் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகின்றனர். பாலியல் தொல்லை தந்ததைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். 

Tags : #SEXUALABUSE #SIVAGANGAI #POCSO