பட்டப்பகலில் பெண்ணிடம் நகைப்பறிப்பு..! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 27, 2019 02:37 PM

கோவையில் பட்டப்பகலில் பெண்ணிடம் நகைபறிப்பு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chain snatching in Coimbatore

கோவை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் ரஞ்சிதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று உக்கடம் பகுதியில் இருக்கும் மீன் சந்தைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக லாரிப்பேட்டை என்னும் பகுதி வழியாக சென்றுகொண்டு இருந்துள்ளார்.

அப்போது ரஞ்சிதத்தைக் கடந்து சென்ற மர்ம நபர் ஒருவர், அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளார். இதனால் பதறிப்போன ரஞ்சிதம் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பிடிப்பதற்குள் அந்த மர்ம நபர் நகையுடன் தப்பிச்சென்றுள்ளார்.

இதனை அடுத்து புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஒரு கடையின் சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிசிடிவி வீடியோ காட்சியின் அடிப்படையில் நகையை திருடிச்சென்ற மர்ம நபரை போலிஸார் தேடிவருகின்றனர்.

Tags : #COIMBATORE #SNATCHED #WOMEN