'14 வயது சிறுமியை கடத்தி, பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 22, 2019 04:43 PM

14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக, ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sexual abuse to 14 year old girl in coimbatore auto driver arrested

கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள மதியழகன் என்பவரின் ஆட்டோவில் சிறுமி தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அந்த சிறுமிக்கு ஆட்டோ ஓட்டுநர் மதியழகன் பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் குளத்துபாளையம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கும் சிறுமியை தேடி வந்த மதியழகன், கடந்த 4 நாட்களுக்கு முன் சிறுமியை கடத்திச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் மறைந்திருந்த அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட சிறுமியையும் காவல்துறையினர் அவரிடமிருந்து மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : #SEXUALABUSE #COIMBATORE #AUTODRIVER