‘ஒரே பாலின திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய 2 கிரிக்கெட் வீராங்கனைகள்’.. வைரலாகும் போட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 19, 2019 09:33 PM
நியூஸிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்து நாட்டில் கடந்த 2013 -ம் ஆண்டு ஓரே பாலினத்தோர் திருமணம் செய்து கொள்ளும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பெருபான்மையான வாக்குகள் வந்ததை அடுத்து அது சட்டமாக்கப்பட்டது. இதனை அடுத்து நியூஸிலாந்து நாட்டில் பல ஒரு பாலின திருமணம் நடந்துள்ளன.
இந்நிலையில் நியூஸிலாந்து விராங்கனையான ஹேலி ஜேன்சென் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான நிக்கோலா ஹான்காக் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
From #TeamGreen, congratulations to Stars bowler Nicola Hancock who married her partner Hayley Jensen last weekend! 💍 pic.twitter.com/QvWb7Ue0Qx
— Melbourne Stars (@StarsBBL) April 18, 2019
