இனி மெட்ரோ, பஸ்ஸில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 03, 2019 01:34 PM

டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் நகர பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Arvind Kejriwal announced free Metro and Bus rides for women

நடந்து முடிந்த மக்களவைத் தேர்ததில் ஆம் ஆத்மி கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் பல அதிரடியான திட்டங்களை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அறிவித்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இதனால் ஏற்படும் இழப்பு மற்றும் செலவினங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பெண்கள் மெட்ரோ ரயில் மற்றும் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags : #ARVINDKEJRIWAL #WOMEN #DELHIMETRO