'தலைமுடியை இழுத்துப் பிடித்து' 3 பெண்கள் போட்டுக்கொண்ட சண்டை.. பரபரப்பான மருத்துவமனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 30, 2019 05:35 PM

மருத்துவமனைக்கு வந்தமர்ந்திருந்த 3 பெண்கள் திடீரென சண்டையிட்டுக் கொண்டது மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை கிளப்பியது.

3 women started to fight suddenly by pulling hair in hospital bizarre

டெல்லியில் உள்ளது தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை. இந்த மருத்துவமனை வளாகத்தில் திடீரென தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட பெண்களால் அந்த மருத்துவமனை பரபரப்பானது.

தினம் பலர் வந்து போகும் இந்த பொது மருத்துவமனையில் 3 பெண்கள் சிகிச்சைக்காகவோ, சிகிச்சை பெற்றிருப்பவரை காண வந்திருந்தார்களா என தெரியவில்லை. ஆனால் அங்கு திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த பெண்கள் மூவரும் தங்களுகுள் மூண்ட சண்டையால் ஒருவருக்கொருவர்  தலை முடியை இழுத்து பிடித்துக் கொண்டு அடித்துக்கொள்ளத் தொடங்கினர்.

மூவரும் ஒருவரையொருவர் கட்டி உருண்டு சண்டை போட்டுள்ளனர். இதை பார்த்து பதறிப் போய் அங்கிருந்த ஊழியர்கள் சிலரும் ஒரு பெண் காவலரும், இன்னொரு காவலரும் தடுக்க முற்பட்டனர்.  ஆனால் அவர்களால் இந்த பெண்களின் தீவிரமாகிப் போன சண்டையைத் தடுத்து நிறுத்த முடியாது போனது.

உடனே அங்கிருந்த சில ஆண் ஊழியர்களும் இந்த சண்டையை வந்து விலக்கியுள்ளனர். திடீரென அநாகரிகமாய் மருத்துவமனை என்று கூட பார்க்காமல் சண்டையிட்டுக் கொண்ட இந்த பெண்களுக்குள் இந்த சண்டை ஏன் வந்தது? எதற்காக மூவரும் தங்களை, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் என்பது பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : #FIGHT #WOMEN #HOSPITAL