13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. முதியவரான உறவினரே துன்புறுத்திய கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 03, 2019 11:19 AM

குடியாத்தம் அருகே 13 வயது  சிறுமியை மிரட்டி, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 year old girl sexually abused by old man in vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரஹினா. இவரது 13 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டரான இலியாஸ் பாஷா என்பவர், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

மேலும் இது குறித்து உனது பெற்றோர்க்கு தெரியப்படுத்தினால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி அவ்வப்போது சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாதலால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று காண்பித்தனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தப்போது சிறுமி தனக்கு நடந்த அவலத்தை கூறி கதறி அழுதார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், பரோட்டா மாஸ்டர் இலியாஸ் பாஷாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பரோட்டா மாஸ்டருக்கு திருமணமான நிலையில் 1 மகளும், திருமண வயதில் 2 மகளும், 1 மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags : #SEXUALABUSE #ARRESTED #VELLORE #POCSO