“உயர் அழுத்த மின்கம்பி உரசி”.. “தூக்கி வீசப்பட்ட யானை!”... ஊர் மக்கள் செய்த உருக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 21, 2020 04:33 PM

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்துள்ள ஆந்திர எல்லை கௌண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது.

forest elephant dies due to high Voltage shock in vellore

இங்குள்ள யானைகள் நீர் நிலைகளைத் தேடியும், உணவு தேடியும் மோர்தானா அணை, சைனகுண்டா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா உள்ளிட்ட வனப்பகுதிகளிலும், விளைநிலங்களிலும் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதாக அம்மக்கள் கருதியுள்ளனர். இதனால் பலரும் சட்டவிரோதமான மின் கம்பி வேலைகளை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி, குடியாத்தம் பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் ஊராட்சியில் உள்ள காவலேரி குட்டை வனப்பகுதியில், பெரிய காட்டு யானை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், அதற்குள் சித்தூர் மாவட்டம், பங்காருபாளையம் மேற்கு வனச்சரகத்துக்குட்பட்ட தேக்குமந்தை-மொகிலி கோயில் வனப்பகுதியில் இன்னொரு யானை இறந்து கிடந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனச்சரகர்கள் ஒற்றைக் கொம்புடைய இந்த யானை 30 வயதுடையது என்றும், அப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் உயர்அழுத்த மின்கம்பி உரசியதால் யானை தூக்கி வீசப்பட்டு இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவ்விடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானைக்கு சந்தனம், குங்குமம் வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தியதோடு, போலீஸார்  அங்கேயே யானையை அடக்கம் செய்தனர்.

Tags : #ELEPHANT #VELLORE