darbar USA others

விரட்டி விரட்டி 'சேட்டை' செய்த எட்டுமாத 'யானைக்குட்டி'.... 'வலை' போட்டுப் பிடித்த சுவாரஸ்ய சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 13, 2020 03:34 PM

ஓசூர் அருகே, கிராமங்களுக்குள் புகுந்து சேட்டை செய்த யானைக் குட்டியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

The eight-year-old elephant who chases and chases.

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 60க்கும் மேற்பட்ட யானைகள், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டில் முகாமிட்டிருந்தன. இதில் தலா 30 யானைகள் தனியாக பிரிந்து, சானமாவு மற்றும் போடூர்பள்ளம் வனப்பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளன.

நேற்று அதிகாலை, சானமாவு யானைகள் கூட்டத்தில் இருந்து, எட்டு மாத யானை குட்டி தனியாக பிரிந்து, பீர்ஜேப்பள்ளி அடுத்த அகரம் கிராமத்துக்கு சென்றது. அங்கு கால்நடைகள் மற்றும் மக்களை விரட்டி தாக்க முயன்ற போது, வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். இதனால், ஓபேபாளையம் கிராமத்துக்கு சென்ற யானை, தீவனப்புல், தக்காளி, மிளகாய் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது.

இதையடுத்து, கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் மூன்று மணிக்கு யானை குட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி, வலையை போட்டுப் பிடித்தனர். பின்னர், யானைக்குட்டியின் கண் கட்டப்பட்டு, சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு, யானைகள் கூட்டத்துடன் சேர்க்க சானமாவு காப்புக் காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டது. யானை குட்டியை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டனர்.

Tags : #ELEPHANT