கால்வாயில் கிடந்த இளம் பெண் சடலம்... அதிர்ச்சியான பொதுமக்கள்... வேலூரில் பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 03, 2020 12:51 PM

வேலூரில் கழிவுநீர் கால்வாயில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

unidentified woman body recovered from the sewer in vellore

வேலூரில் பழைய நேஷனல் தியேட்டர் பகுதியில் இருந்து, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டுக்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த வழியாக நேற்று அதிகாலையில் பொமக்கள் சிலர் சென்றனர். அப்போது கால்வாயில் கவிழ்ந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அந்த இளம் பெண்ணின் சடலத்தை அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது. முடியை பாப் கட்டிங் செய்து, சுடிதார் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் அவர் இறந்து 2 நாட்களுக்குமேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த இளம்பெண்ணை யாரும் கொலை செய்து கால்வாயில் வீசினார்களா அல்லது  அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண்ணின் சடலம் அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்டுள்ளதால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UNIDENTIFIED #WOMAN #VELLORE