VIDEO: ‘சும்மா போன யானையை சீண்டிய இளைஞர்’.. ‘வெறிகொண்டு ஓட ஓட துரத்திய பயங்கரம்’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Jan 02, 2020 01:32 PM
ஒடிஷாவில் தன்னை சீண்டிய இளைஞர்களை காட்டு யானை ஓட ஓட துரத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் என்ற இடத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் யானையை துரத்த முயன்றுள்ளனர். கூட்டத்தைப் பார்த்ததும் மிரண்டு போன யானை அங்கிருந்து வேகமாக செல்லத் தொடங்கியது.
அப்போது இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த குச்சியால் யானையை பலமாக தாக்கினார். இதனால் கோபமடைந்த காட்டு யானை அந்த இளைஞரை ஓட ஓட விரட்டியது. இதில் நிலைகுலைந்துபோன இளைஞர் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து யானைகள் ஊருக்குள் வந்தால் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் வனத்துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
Tags : #ATTACKED #ELEPHANT #ATTACKS #ODISHA #VIRAL
