அவரே சுத்தி பாத்துட்டு போய்டுவாரு... யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க... 'யானைக்கு' ஸ்டார் ஹோட்டல் ஊழியர்கள் செய்த மரியாதை....

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 20, 2020 07:08 PM

இலங்கையில் ஸ்டார் ஹோட்டலுக்குள் சென்ற யானை ஒன்று, சாவகாசமாக அங்கு சுற்றி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

An elephant that wanders into Star Hotel in Sri Lanka

வனவிலங்குகள் வாழும் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை கட்டப்படுவதால் வேற வழியில்லாமல் விலங்குகள் அங்கு நுழைந்து விடுவதுண்டு. இதனால் மனித, விலங்கு மோதல் ஏற்பட நேரிடுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று கேள்விப்பட்டிருப்போம். தற்போது இலங்கையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. யானை ஒன்று ஸ்டார் ஹோட்டலுக்குள் புகுந்து நிதானமாக சுற்றிப்பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஹோட்டலின் முன்பகுதிக்குள் நுழைந்த அந்த யானை அறையின் ஒவ்வொரு பக்கமாக சென்று பார்வையிடுகிறது. அங்கிருந்த சிறிய விளக்கு கம்பத்தை யானை தொட்டு பார்க்கும்போது அது கீழே விழுந்துவிட, அதை எடுக்க முயன்று முடியாததால் அங்கேயே விட்டு செல்கிறது. அதைதொடர்ந்து அங்குள்ள ஜன்னல் வழியாக நகரை ரசித்து விட்டு, அந்த யானை அங்கிருந்து மெதுவாக வெளியேறுகிறது. யானையை யாரும் எந்த தொந்தரவும் செய்யாததால் அங்கிருந்து அமைதியா வெளியேறிவிட்டது.

Tags : #ELEPHANT #SRILANKA #STAR HOTEL