எங்க தப்பிச்சு ஓட பாக்குற...! எந்த ஜில்லாவுக்கு போனாலும் உன்ன விடமாட்டேன்... வெறிகொண்டு துரத்திய யானை... வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 17, 2020 04:15 PM

கர்நாடகாவில் யானை ஒன்று சரக்குகள் சுமந்து வந்த டிரக்கை ஆக்ரோஷத்தோடு விரட்டிய செயல் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Elephant chasing the truck and escaping.. viral video...

கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்கா அருகில் உள்ள சாலையில் ட்ரக் ஒன்று சரக்குகள் ஏற்றி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த யானை ஒன்று கோபத்தின் உச்சத்தில் ட்ரக்கை வெறிகொண்டு துரத்துகிறது.

இதனால் அச்சம் அடைந்த டிரைவர் உடனே வண்டியை பின்னோக்கி இயக்குகிறார்.இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் நிகழவில்லை. வண்டி சாலையோரமாக நின்ற உடன், யானை காட்டுக்குள் சென்றது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Tags : #ELEPHANT