‘டூர் போன சென்னை இளைஞர்கள்’.. ‘திடீரென அறுந்து விழுந்த ராட்டினம்’.. பிரபல பூங்காவில் நடந்த விபத்து..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொடைக்கானல் அருகே பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை சேர்ந்த 15 இளைஞர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு கொடைக்கானல் வானிலை ஆய்வக சாலை அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு வந்துள்ளனர். அங்கு கட்டணம் செலுத்திவிட்டு பூங்காவில் உள்ள ராட்டினத்தில் ஏறி சவாரி செய்துள்ளனர். அப்போது திடீரென ராட்டினம் பழுதானதால் கீழே விழுந்துள்ளது.
இதில் சென்னையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் சிக்கி படுகாயமடைந்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் பூங்காவிற்கு விரைந்து வந்துள்ளனர். பின்னர் ராட்டினத்தில் சிக்கி காயமடைந்த இளைஞர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags : #ACCIDENT #CHENNAI #KODAIKANAL #THEMEPARK #INJURY
