“உடம்பு சரியில்லனு அம்மா எனக்கு டீ போட போனாங்க!”.. கதறியழும் மகன்.. கணப்பொழுதில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 19, 2020 11:33 AM

ஈரோடு அருகே குளத்துப் பாளையம் மேட்டையன் காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் நந்தினி என்கிற தம்பதியர் தங்களது 7 வயது மற்றும் 4 வயது மகன்களுடன் இருந்து வந்தனர்.

erode woman dead after gas cylinder burst out

ரமேஷ் சொந்தமாக ஜே.சி.பி வண்டி ஓட்டி வந்துள்ளார். இவர்கள் தங்களது இளைய மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர், ரமேஷ் தன் உடல்நிலை சரியில்லாத மூத்த மகனையும் மனைவியையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மூத்த மகன், வீட்டுக்கு வெளியில் இருந்த ஆட்டுக்கு தண்ணீர் வைக்க சென்றபோது வீட்டுக்குள் இருந்து வெடித்துச் சிதறிய சத்தத்துடன் தீ மண்டலம் புகையுடன் கிளம்பியது. 

உடனே அம்மாவை காப்பாத்துங்க என்று அலறிய சிறுவனின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினரும், தகவல் அறிந்தும் ரமேஷும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். நெருப்பில் எரிந்துகொண்டிருந்த மனைவியை காப்பாற்ற உள்ளே புகுந்த ரமேஷுக்கு தீக்காயம் உண்டாக, நந்தினியோ பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து சித்தோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, “உடம்பு சரியில்லாத எனக்கு டீ வெச்சுத் தரேனு சொல்லிதான் அடுப்ப பத்த வெச்சாங்க அம்மா. ஆனா அதுவே வெடிச்சு அம்மாவ கொன்னுடுச்சே! ” என்று பெரிய மகன் கதறி அழுதுள்ளான். பள்ளியில் இருந்து அழைத்துவரப்பட்ட இளைய மகனோ நடந்ததை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ‘அம்மா எங்க’ என கேட்டு அழுதுள்ளான்.

இதனிடை நடந்ததைக் கூறி நந்தினியின் பெற்றோருக்கு போன் செய்தபோது, அவர்களோ, “எங்க பேச்ச மீறி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டா.. அவளுக்கு என்ன ஆனா எங்களுக்கு என்ன? நாங்க எங்க 2வது பொண்ணு கல்யாண பத்திரிகை அடிக்குற விஷயமா மும்முரமா இருக்கோம் ” என்று சொல்லி போனை கட் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Tags : #ERODE #CYLINDER #GAS #WOMAN