தந்தையால் ‘மகள்களுக்கு’ நடந்த கொடூரம்... தாய் கொடுத்த ‘அதிர்ச்சி’ புகார்.... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருந்துறையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி குருநாதன் (48). இவருடைய இரண்டாவது மனைவிக்கு 7 மற்றும் 8 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குருநாதனின் மனைவி கடந்த 2016ஆம் ஆண்டு 2 மகள்களையும் தன் கணவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரிடம் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
அதில், பாதிக்கப்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கும் நிவாரண நிதியாக தமிழக அரசு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் குருநாதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு தலா 20 ஆண்டு ஏககாலத்தில் மொத்தமாக 40 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5000 ரூபாய் வீதம் மொத்தமாக 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
