'இப்டி கூட தப்பிக்கலாமா?'... 'துரத்தி வந்த யானையை கண்டு'... 'அஞ்சாமல் பெண் செய்த காரியம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தன்னைத் துரத்தி வந்த யானையை கண்டு அஞ்சாமல், துணிச்சலாக வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

உதகையில் இருந்து முதுமலை வழியாக மைசூர் செல்லும் சாலையில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தெப்பக்காடு அருகே சாலையோர மறைவில் இருந்து திடீரென வெளிப்பட்ட யானை ஒன்று அந்தப் பெண்ணையும், காரில் வந்தவர்களையும் துரத்தத் தொடங்கியது.
கார் வேகமாக சென்றுவிட, சைக்கிளில் இருந்து இறங்கி தள்ளிக்கொண்டே சிறிது தூரம் ஓடிய அந்தப் பெண், பின் சுதாரித்துக் கொண்டு ஓடாமல் நின்றார். அவர் நின்றதைப் பார்த்து யானையும் நிற்கவே, மெல்ல சைக்கிளை பின்னோக்கி தள்ளிக்கொண்டே தப்பினார்.
யானையும் அங்கிருந்து விலகிச் சென்றது. சமயோசிதமாக செயல்பட்டதால், பெண் சுற்றுலாப் பயணி யானையிடமிருந்து உயிர் தப்பினர். சக சுற்றுலாப் பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த செல்போன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
