2 மாதங்களுக்கு முன் ‘காணாமல்’ போனவர்... ‘எலும்புக்கூடாக’ கிடைத்த கொடூரம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்... ‘பரபரப்பு’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 06, 2020 11:38 PM

நாகையில் 2 மாதங்களுக்கு முன் காணாமல் போனவர் எலும்புக்கூடாக கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kollidam Nagai Man Brutally Murdered Body Found After 2 Months

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (45). இவர் கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க கொள்ளிடத்தின் கரையோரப் பகுதிக்குச் சென்றுள்ளார். அன்றிரவு அவர் வீடு திரும்பாததால் செல்வராசின் தாய் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடத்தின் கரையோரம் மனித எலும்புத் துண்டுகள் சிலவும், செல்ராசின் உடையும் கிடந்ததை அப்பகுதியினர் சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த எலும்புகளை சேகரித்து பரிசோதித்துப் பார்த்துள்ளனர். அதில், அந்த எலும்புகள் செல்வராசுடையதுதான் எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த செல்வராசு அப்பகுதியில் சிலருக்கு கடன் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் கடன் தொடர்பான கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இதுகுறித்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #NAGAI #KOLLIDAM