இளம்பெண்ணை 'பலாத்காரம்' செய்ய முயன்ற கொள்ளையன்... ஒரே வார்த்தையில் 'தலைதெறிக்க' ஓட்டம்... அப்டி என்ன சொல்லி இருப்பாங்க?
முகப்பு > செய்திகள் > உலகம்தனிமையில் இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த திருடனிடம் இருந்து அந்த பெண் சாதுரியமாக தப்பித்த நிகழ்வு அண்மையில் நடந்தேறியுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் இருந்து 3 மணி தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான். அங்குள்ள வீடொன்றில் கொள்ளையன் ஒருவன் திருடும் நோக்கத்துடன் நுழைந்துள்ளான். அப்போது வீட்டில் இளம்பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அவரை பார்த்தவுடன் அந்த திருடன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அவனிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடி இருக்கிறார்.
எனினும் அந்த கொள்ளையன் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை. கடைசியில் அந்த பெண் பலமாக இருமி, தனக்கு கொரோனா இருப்பதாக பொய் கூறியிருக்கிறார். மேலும் தான் வூகான் நகரில் இருந்து வந்ததாகவும், அதனால் தான் தன்னை தனிமைப்படுத்தி வைத்து இருப்பதாவும் எக்ஸ்ட்ரா கொஞ்சம் எடுத்து சொல்லியிருக்கிறார். இதைக்கேட்ட அந்த திருடன் பின்னங்கால் பிடரியில் பட தலைதெறிக்க ஓட்டம் எடுத்துள்ளான்.
தொடர்ந்து அந்த பெண் போலீசில் இதுதொடர்பாக புகாரளிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி, அந்த 25 வயது திருடனை பிடித்து தற்போது ஜெயிலில் அடைத்துள்ளனர்.
