‘இப்படி’ எல்லாம் கூட நடக்குமா...? ஒரேயொரு ‘புடவையால்’ நின்ற ‘காதல்’ திருமணம்... ‘குடும்பமே’ சேர்ந்து கொடுத்த ‘அதிர்ச்சி’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 07, 2020 04:34 PM

கர்நாடகாவில் மணப்பெண்ணின் புடவை பிடிக்காததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

Karnataka Grooms Family Cancels Wedding Over Brides Saree

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரகுகுமார் - சங்கீதா இருவரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இரு வீட்டாரும் அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமணத்திற்காக பெண் வீட்டார் சார்பில் மணப்பெண்ணிற்கு வாங்கிய புடவையின் தரம் மணமகன் வீட்டாருக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர்கள் புடவையை மாற்றும்படி கேட்டதாகவும், ஆனால் பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து திருமணத்திற்கு முதல்நாள் மணமகன் வீட்டார் திடீரென திருமணத்தை நிறுத்தியுள்ளனர். மேலும் மணமகனும் மண்டபத்திலிருந்து சென்றுவிட, அதிர்ந்துபோன பெண் வீட்டார் இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

Tags : #KARNATAKA #POLICE #MARRIAGE #GROOM #BRIDE #SAREE