'வேலைக்கு போக சொல்லி திட்டுனா'... கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், 'கணவர்' செய்த கொடூரம்... அதிர்ந்து போன 'திருச்சி' போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 06, 2020 01:21 AM

வேலைக்கு போக சொல்லி திட்டிய கர்ப்பிணி மனைவியை கணவர் கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம் திருச்சியில் நடந்துள்ளது.

Husband killed Pregnant wife in Trichy, police investigate

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த கமல்காந்த் என்பவருக்கும், ஜீவிதா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 80 சவரன் நகைகள், சொகுசு கார் ஆகியவற்றை ஜீவிதாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு முன் சிங்கப்பூரில் வேலை பார்த்ததாக கூறப்படும் கமல்காந்த் திருமணத்திற்கு பின் எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். சுமார் 7 மாதங்கள் ஆகியும் அவர் எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் இருந்ததால், ஒன்றரை மாத கர்ப்பிணியான அவரது மனைவி ஜீவிதா அவரை வேலைக்கு போகச்சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

வழக்கம்போல நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கமல்காந்த் கர்ப்பிணி மனைவி என்றும் அவரை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, கைகளில் அறுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து இருக்கிறார். ஜீவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் கமல்காந்த் கைகளில் ரத்தத்துடன் வெளியில் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.

தொடர்ந்து காயத்துடன் இருந்த கமல்காந்த், முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர், உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கமல்காந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.