‘அழுதுகிட்டே வீட்டுக்கு வந்த 5 வயசு சிறுமி’.. பதறி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப்போன தாய்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சாணக்யா பகுதியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் துப்புறவு பணியாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது 5 வயது குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளது. சிறிது நேரத்தில் திடீரென கதறி அழுதபடியே சிறுமி வீட்டுக்குள் ஓடி வந்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமியின் தாய், அவரிடம் விசாரித்துள்ளார். ஆனால் சிறுமி ஏதும் சொல்லாமல் தொடர்ந்து அழுதுள்ளார்.
அதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அவரது தாய் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அமெரிக்க தூதரக வளாகத்தில் வசிக்கும் 25 வயது டிரைவர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து டிரைவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேறகொண்டு வருகின்றனர்.
