'56 வயது காதலனைக் கொன்ற 27 வயதான ஓரினச்சேர்க்கையாளர்'... விசாரணையில் திடுக்கிடும் தகவல்!... நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியா56 வயதான காதலனைக் கொன்ற வழக்கில் 27 வயதான ஓரினச்சேர்க்கையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 56 வயதான உமேஷ் பாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், திடீரென்று அவர் காணாமல் போய்விட்டதாக, அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் அந்த வழக்கை விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அவரை போலீஸார் சடலமாக மீட்டனர்.
இது குறித்து காவல் ஆய்வாளர் ராஜ்குமார் கூறியதாவது, 'உமேஷ் பாட்டிலும், 27 வயதான ப்ரஃபுல் பவார் என்பவரும் ஆறு மாதங்களுக்கு முன் எதர்ச்சியாக சந்தித்துள்ளனர். அவர்களுடைய தொடர் சந்திப்பு நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. மேலும், அவர்கள் ஒருவர் மற்றொருவர் வீட்டுக்குச் சென்று வரும் அளவிற்கு நெருக்கமாகப் பழகி, ஓரினச்சேர்க்கை உறவாக அவர்களது நட்பு மாறியுள்ளது.
அதன் பின், ப்ரஃபுல் பவாருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அதனால் பவார், பாட்டிலை தவிர்க்கத் தொடங்கியுள்ளார்.
பிப்ரவரி 4ம் தேதி, பவாரின் மனைவி வீட்டில் இல்லாத போது, அவர் வீட்டுக்கு பாட்டில் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பவார், பாட்டிலை கொன்று, உடலை பையில் போட்டு, குப்பையில் வீசிச் சென்றுள்ளார்', என்று அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ப்ரஃபுல் பவார் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
