‘வாயில் நுரை’.. ‘அருகில் கிடந்த விஷம்’.. காவிரி ஆற்றங்கரையில் கிடந்த கார் டிரைவர், கல்லூரி மாணவி சடலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 07, 2020 04:39 PM

திருச்சி காவிரி ஆற்றின் அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trichy college girl car driver commits suicide near kaveri river

திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (31).  இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவர் தென்னூர் இனாம்தோப்பு பகுதியை சேர்ந்த காவியா (23) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை ரமேஷ் தனது காரில் இளம்பெண்ணுடன் திருச்சி முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் காவிரி கரைக்கு காரில் வந்துள்ளார். அங்கு நீண்ட நேரமாக அப்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் காரின் அருகே சென்றுள்ளனர். அப்போது இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு சடலமாக கிடந்துள்ளனர். அவர்களுக்கு அருகே விஷ பாட்டில் கிடந்துள்ளது. உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ரமேஷுடன் தற்கொலை செய்துகொண்ட பெண் ரீனா (18) என்பதும், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.