'சுற்றுலா' சென்ற இடத்தில் பரிதாபம்... நண்பர்கள் கண்முன்னே... உயிரிழந்த 'சென்னை' மாணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 06, 2020 12:26 AM

நண்பர்கள் கண்முன்னே சுழலில் சிக்கி தனியார் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Chennai Private College student dies, Police Investigate

சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் பிரிதம் சவுத்ரி (22). ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த இவர் தன்னுடைய நண்பர்களுடன் நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் நண்பர்கள் அனைவரும் ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தனர்.

அப்போது பிரித்தம் சவுத்ரி ஆற்றில் நீந்தி சென்றபோது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி கொண்டார். அவரை, நண்பர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து நீரில் மூழ்கிய அவர் மரணமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பரிசல் ஓட்டிகள் உதவியுடன் பிரிதமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.