‘சவாரி வேணுமா மேடம்’.. சட்டென சுத்தி வளைத்த பெண்கள்.. சென்னை ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 06, 2020 01:15 PM

சென்னையில் ஆட்டோ டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Chennai women robbery from auto driver near Gopalapuram

சென்னை கோபாலபுரம் அருகே நேற்றிரவு 4 பெண்கள் நின்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர், அவர்களிடம் சவாரி வேண்டுமா எனக் கேட்டுள்ளார். அப்போது 4 பெண்களும் ஆட்டோ டிரைவரை திடீரென சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துள்ளனர். உடனே ஆட்டோ டிரைவர் சத்தம்போட அருகில் இருந்தவர் விரைந்து வந்து அப்பெண்களை விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர்.

அதில் 3 பெண்கள் தப்பிவிட ஒரு பெண் மட்டும் அவர்களிடம் சிக்கியுள்ளார். அப்போது பொதுமக்கள் அப்பெண்ணுக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் பிடிப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அப்பெண் வடபழனியைச் சேர்ந்த புகழ்மதி என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மேல் விசாரணைக்காக அவரை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags : #ROBBERY #POLICE #CHENNAI #WOMEN #AUTODRIVER