வீட்டுக்குள் ‘கட்டுக்கட்டாக’ கிடந்த ரூ.200, ரூ.500 நோட்டுகள்.. ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய போலீஸ்.. ஆம்பூரை அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 09, 2020 05:11 PM

ஆம்பூரில் கள்ள நோட்டு அடித்து மாற்ற முயன்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Ambur man arrested over printing circulating fake currency

மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் கள்ள நோட்டுகள் கை மாற்றப்படுவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதனால் தாராவி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி 1 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற தமிழர் ஒருவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் வேலுரை சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாஸ்கரனை மும்பை போலீசார் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர். இன்று அதிகாலை ஆம்பூர் போலீசார் உதவியுடன் அய்யனூர் பகுதியில் உள்ள சரவணன் வீட்டை சுற்று வளைத்தனர். பின்னர் அவரது வீட்டுக்குள் சோதனை நடத்தியதில், கட்டுகட்டாக ரூ.7,55,700 மதிப்பிலான 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் கலர் ஜெராக்ஸ் மெஷின் மற்றும் நோட்டுக்களை கச்சிதமாக வெட்டும் மெஷினையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு மும்பைக்கு அழைத்து சென்றனர். இதேபோல் கடந்த 2018ம் ஆண்டு ஆம்பூர் பகுதியில் 2000 ரூபாய் கள்ள் நோட்டுகளை மாற்ற முயன்ற நபர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

News Credits: Vikatan

Tags : #POLICE #AMBUR #FAKECURRENCY #ARRESTED