‘கணவரை விட்டுட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கோ’.. ‘இல்லனா..!’.. பகீர் கிளப்பிய சென்னை கார் டிரைவர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 08, 2020 08:47 AM

திருமணமான பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துவிடுவதாக மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai car driver arrested by Kovai police for woman abuse case

கோவை மாவட்டம் உப்பிலியாப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் சென்னையில் வேலை பார்த்தபோது பக்கத்துவிட்டு கார் ஓட்டுநர் ராஜா என்பருடன் பழகியுள்ளார். அப்போது அப்பெண் கார் ஓட்டுநர் ராஜா அருகில் நின்று சில புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவரை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ராஜா அப்பெண்ணை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, தன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக ராஜா மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ராஜாவை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #POLICE #CHENNAI #CARDRIVER #WOMAN