‘பிறந்து 30 நாட்களே ஆன பெண் சிசு’... ‘பெற்றோர், தாத்தாவால் நடந்தேறிய கொடூரம்’... ‘உறைய வைக்கும் சம்பவம்’... ‘மு.க.ஸ்டாலின் வேதனை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 06, 2020 04:32 PM

பெண்கள் தினம் நெருங்கி வரும் வேளையில், எருக்கம்பால் எனப்படும் கள்ளிப்பால் கொடுத்து பிறந்து 31-வது நாளில் பெண் சிசுவை தாய், தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் புதைத்த சம்பவம் தமிழக மக்களை உலுக்கியுள்ளது.

30 day old girl baby who killed by infanticide in Madurai

பெண் குழந்தை பிறந்தால்  அதனை வளப்பதற்கு அதிக செலவு ஆகும் என்று 1980 களில் அரங்கேறி வந்த எருக்கம்பால் எனப்படும் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவை கொலை செய்யும் கலாச்சாரம் மீண்டும் துளிர்விட்டுள்ளதாக மக்கள் எண்ணும் வகையில் நடைபெற்றுள்ளது மதுரை மாவட்டம் புள்ளநேரி கிராமத்தில். அங்கு வசித்து வரும் வைரமுருகன் (32), சவுமியா தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 31-ம் தேதி ஆண் குழந்தையை எதிர்பார்த்த தருணத்தில், மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சவுமியா.

பிறந்த 31-வது நாளில் அதாவது கடந்த 2-ம் தேதி, உடல்நலக் குறைவால், அந்த பெண் சிசு உயிரிழந்துவிட்டதாக கூறி பெற்றோரும் அவசர அவசரமாக குழந்தையை புதைத்துள்ளனர். தம்பதியின் இந்த நடவடிக்கைகள் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வீடு பூட்டிக் கிடக்கவே சந்தேகம் அதிகரிக்க, வெளியூரில் பதுங்கி இருந்த, பெற்றோர் மற்றும் பெண் சிசுவின் தாத்தா சிங்கத்தேவனை கைதுசெய்து விசாரணை நடத்தினர். அதில், ‘எனக்கு மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை.

எனவே அதனை கொல்வது என்று நானும், எனது தந்தையும் முடிவு செய்தோம். இதனைத் தொடர்ந்து 31 நாளே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தோம். பின்னர் உடலை வீட்டு முன்பு புதைத்து விட்டோம்’ என்றார். இந்த தகவலை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நேற்று மாலை அதிகாரிகள் முன்னிலையில் பெண் சிசு உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனையும் நடைபெற்றது. அதில், பெண் சிசு கள்ளிப்பால் கொடுத்து குழந்தை செய்தது மருத்துவ அறிக்கையில் உறுதியானது. இந்தச் சம்பவம் உலுக்கியுள்ளது.

இதுகுறித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது’ என்று வேதனை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மதுரை உசிலம்பட்டி அருகே  ஏற்கனவே பெண் குழந்தை உள்ளநிலையில், மீண்டும் பிறந்த பெண் சிசு 18 நாளில் மூச்சுத் திணறால் உயிரிழந்ததாக கூறப்படுவ்தால், இந்த சிசுவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags : #CRIME #MADURAI #POLICE #INFANTICIDE