‘சிறார் ஆபாசப் படங்கள் 50 ரூபாய்க்கு!'.. ‘கல்லூரி மாணவர்களுக்கு பகிரப்பட்ட சம்பவம்’.. மிரளவைத்த பிரவுசிங் சென்டர் ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 09, 2020 01:13 PM

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பிரவுசிங் சென்டர் மூலம் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து கல்லூரி மாணவர்களிடம் 50 ரூபாய்க்கு விற்ற 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 men arrested for spreading pornographic to college students

கமுதியில் உள்ள பிரவுசிங் சென்டர் மற்றும் செல்போன் கடைகளில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவை மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவ்களில் பகிரப்பட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்றனர்.

இதனையடுத்து கமுதியில் உள்ள சுப்பையா தேவர் என்பவர் நடத்திவந்த பிரவுசிங் சென்டரில் போலீசார் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் பிரவுசிங் சென்டரில் உள்ள ஊழியர்களான வழிவிட்ட கிழவன் மற்றும் பொன்னிருள் ஆகியோர் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்த தகவல் தெரியவந்தது. இதனையடுத்து ஊழியர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Tags : #POLICE #RAMANATHAPURAM #PORNOGRAPHIC