‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு’.. ‘வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்த ஹவுஸ் ஓனர்’.. திருப்பூர் அருகே பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 25, 2020 01:10 PM

குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tirupur woman commits suicide after killed his child

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரியபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவரது மனைவி துர்கா (28). இவர்களுக்கு 1 வயதில் ரித்திக் என்ற மகன் இருந்தார். வாடகை வீட்டில் வசித்து வரும் பிரபாகரன் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். அப்போது துர்கா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியத்தில் இருந்து மாலை 6 மணிவரை வீட்டின் கதவு திறக்காமல் இருந்துள்ளது. மேலும் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனால் வீட்டின் உரிமையாளர் துர்காவின் பேரைச் சொல்லி அழைத்து நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார்.

ஆனால் கதவு திறக்கப்படாததால் வீட்டின் ஓட்டை பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது துர்கா தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தை கட்டில் படுத்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் குழந்தையின் கழுத்தில் கை தடங்கள் இருந்ததால் தாயே குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் கணவர் பிரபாகரனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #MURDER #TIRUPUR #WOMAN