'வெறும் ஸ்டாம்பு தான் வேற ஒண்ணுமில்ல'... சிக்கிய பட்டதாரிகள்... 'சேலத்தில்' பரவும் புதிய கலாச்சாரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 24, 2020 06:23 PM

சந்தேகத்தின் அடிப்படையில் பட்டதாரிகள் இருவரை பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Two Youths arrested in Salem, for Ganja smuggling!

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் அவர்கள் இருவரும் சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த சரண்(22), கோகுல்ராஜ்(25) என்பதும் பெங்களூரில் இருந்து கஞ்சா, போதை ஸ்டாம்ப்புகளை கடத்தி வந்து சேலத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் 20 போதை மருந்து ஸ்டாம்ப்புகளை போலீசார் கைப்பற்றினர். இதில் போதை மருந்து தடவிய ஒரு ஸ்டாம்ப்பினை ரூபாய் 1200 முதல் 1500 வரை கல்லூரி மாணவர்களுக்கு இருவரும் விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுவதால் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்திட திட்டமிட்டு, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.