‘ஜீ பூம்பானு சொன்னதும் நடந்துடாது... அதுக்கான நேரம் ஆகும்’.. அமைச்சர் உதயகுமார் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜீ பூம்பா என்றதும் எய்ஸ்ம் மருத்துவமனை வந்துவிடாது என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று வதந்திகள் எழுவதாகவும், சந்தேகம் இருப்பவர்கள் நேரில் சென்று பணிகளை பார்வையிடலாம் என்றும் பேசினார்.
தவிர, என்னென்ன கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பவற்றை பட்டியலிட்ட அமைச்சர் எய்ஸ்ம் மருத்துவமனை தொடர்பாக முதல்வர் தொடர் அழுத்தத்தை கொடுத்துவருவதாகவும், எனினும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த கொஞ்சம் கால அவகாசம் தேவை என்றும் பேசியுள்ளார்.
Tags : #UDHAYAKUMAR #MINISTER #AIIMS
