'உருவாகும் புயல் சின்னம்'... 'அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு'... 'வானிலை மையம் தகவல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 05, 2019 11:32 PM
வங்க கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. இதனால் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்தப் புயல் வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிசாப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில், ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நாகை, கடலூர், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் புகை மூட்டமாக காணப்படுவது குறித்து பதிலளித்துள்ள சென்னை வானிலை மையம், பகல்நேர வெப்பநிலையிலும், இரவு நேர வெப்பநிலையிலும், வேறுபாடு இருப்பதாலும், காற்றில் இருக்கக்கூடிய ஈரப்பத்தாலும் பனிப்போன்று காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளது. வெப்பநிலை மாறும் போது இந்த நிலை மாறும் என கூறப்பட்டுள்ளது.