'மகனை சம்மந்தி திட்டியதால்... 3 பக்க கடிதத்தோடு... கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சம்மந்தி திட்டியதால் 3 பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள், ராசு-தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் முகேஷ்வர்மனுக்கு, அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி, தனியாக வீடு எடுத்து வாடகைக்கு குடியேறியிருக்கிறார்.
இந்நிலையில், முகேஷ்வர்மனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் சிறிய சண்டை ஏற்பட, அர்ச்சனா மேலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு, சண்டை குறித்து தன் பெற்றோரிடம் அர்ச்சனா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ராசுவை தொடர்பு கொண்ட அர்ச்சனாவின் பெற்றோர் அவரது மகன் முகேஷ்வர்மா குறித்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, மனமுடைந்த ராசுவும் அவரது மனைவியும் தனது மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் முடிக்கவில்லை என்ற வேதனையில் இருந்துள்ளனர். தனது மகன் முகேஷ் வர்மாவை வீட்டுக்கு அழைத்து, சம்மந்திகள் தங்களை திட்டி விட்டதாக முகேஷ் வர்மாவிடம் தாய், தந்தையர் கூறியுள்ளனர்.
மேலும், விரக்தியிலிருந்த பெற்றோருக்கு மகன் முகேஷ் வர்மா ஆறுதல் கூறியுள்ளார். ஆனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கணவன், மனைவி இருவரும் மூன்று பக்கத்திற்கு கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு, வாழைப்பழத்தில் குருனை மருந்து கலந்து தற்கொலை செய்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
