‘பொங்கல்’ கொண்டாட வந்த இடத்தில்... உறவினர்களுக்கு ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘புதுமண’ தம்பதி... ‘உறையவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 18, 2020 04:36 PM

ஆரணி அருகே பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் புதுமணத் தம்பதி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tiruvanamalai A Day After Pongal Newly Wed Couple Commits Suicide

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேவராஜ் - காயத்ரி. இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுடைய திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்காத நிலையில், பெங்களூரில் ஓட்டுநராக வேலை செய்து வந்த தேவராஜ் அங்கேயே மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த தம்பதி பொங்கல் கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சித்தி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து இன்று காலை அங்கு வீட்டருகே உள்ள மரத்திலிருந்து புதுமணத் தம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவருடைய உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரு வீட்டாரும் தங்களுடைய காதல் திருமணத்தை ஏற்காததாலேயே தேவராஜும், காயத்ரியும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பொங்கல் கொண்டாட உறவினர் வீட்டிற்கு வந்த புதுமணத் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #PONGAL #TIRUVANAMALAI #AARANI #NEWLYWED #MARRIAGE #COUPLE #SUICIDE