‘ஏன் இந்தியாவுலயே வாழக்கூடாதுனு யோசிச்சோம்!’.. தடபுடலாக நடந்த தன்பாலின திருமணம்!.. வைரல் ஆகும் ஃபோட்டோஷூட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 31, 2019 11:10 AM

2018-ஆம் ஆண்டின் இரண்டாவது அதிகாரப் பூர்வ தன்பாலின திருமணம் கேரளாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்துள்ளது.

another gay couples from Kerala got married in 2019

முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐடி துறையில் பணிபுரிந்த நிகிலேஷ் மற்றும் சோனு ஆகிய 2 ஆண் தம்பதியருக்கு அதிகாரப்பூர்வ தன்பாலினத் திருமணம் நிகழ்ந்தது. இந்த தம்பதியரை அடுத்து, கேரளாவைச் சேர்ந்த நிவேத் மற்றும் அப்துல் ரஹீம் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்பாலின திருமணம் செய்துகொண்டனர்.

பெங்களூரு சின்னப்பநெல்லி குளக்கரையில் நிகழ்ந்த இவர்களின் திருமணமும், அதையொட்டிய திருமண போட்டோஷூட்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுபற்றி பேசிய, ‘நிவேத் மற்றும் அப்துல், முன்னதாக உறவில் இருந்த நாங்கள் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று வசிக்கலாம் என நினைத்தோம். ஆனால் 377 தீர்ப்பு வெளியான பின்பு, ஏன் இந்தியாவிலேயே வசிக்கக் கூடாது என்று எங்களுக்குத் தோன்றியது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #KERALA #WEDDING #COUPLE