'ஜப்பான் டு தர்பார்'... பாத்தா 'ஃபர்ஸ்ட் ஷோ' தான்.... 'தெறிக்கவிடும்' வெளிநாட்டு ரசிகர்கள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 09, 2020 04:43 PM

உலகம் முழுவதும் வெளியாக சக்கை போடு போடும் ரஜினிக்காந்தின் தர்பார் படத்தைக் காண ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்ததிருந்த தம்பதியினர் முதல்நாள் முதல் ஷோவை பார்த்து வெகுவாக ரசித்தனர்.

A couple from Japan came to Chennai to watch the movie Darbar

1995ஆம் ஆண்டு ரஜினிகாந்த்-மீனா நடிப்பில் வெளியான படம் முத்து. இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியான சமயத்தில் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.

மொழி தெரியாவிட்டாலும் சப் டைட்டில் மூலம் இந்தப் படத்தை ஜப்பான் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இன்னும் சில ரசிகர்கள் சென்னைக்கு வந்து ரஜினிகாந்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில் ஜப்பானில் இருந்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக யசுதா என்பவர் அவருடைய மனைவி ஷாட் சூஷ்க்கியுடன் தர்பார் படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக சென்னை வந்துள்ளார். பாபா படம் பார்ப்பதற்காக அவர் முதன்முதலாக சென்னை வந்திருக்கிறார். இதுவரை கிட்டதட்ட பத்து முறை  ரஜினிகாந்த் படம் பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

தமிழக அரசியல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றாலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார் இந்த ஜப்பானிய ரசிகர்.

Tags : #DARBAR #JAPAN #COUPLE #FIRSTSHOW #CAME TO CHENNAI