அந்த 'லென்ஸ்' எவ்வளவு தூரமா இருந்தாலும் அப்படியே..! 'நர்ஸ்லாம் எங்க ட்ரெஸ் மாத்துவாங்கன்னு கரெக்ட்டா தெரியும்...' லென்ஸ் வைத்து இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செவிலியர்கள் அறையில் உடைமாற்றுவதை வீடியோ எடுத்துவிட்டு தப்பி ஓடிய இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. நேற்று, இந்த மருத்துவமனைக்கு வந்த இளைஞர் ஒருவர், செவிலியர்கள் அறையில் உடை மாற்றும் காட்சிகளை மறைந்திருந்து வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த செவிலியர்கள் சத்தம்போடவே, வீடியோ எடுத்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
செவிலியர்களின் சத்தத்தைக் கேட்ட சிலர், தப்பி ஓடிய இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கன்னியாகுமரி அருகே உள்ள மந்தாரம்புதூரைச் சேர்ந்த பிரவீன் (30) எனத் தெரியவந்தது. அவரிடம் ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் போனில் பொருத்தும் கேமரா லென்ஸ் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில், நண்பர் ஒருவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் அவரைப் பார்ப்பதற்காக வந்ததாகவும் கூறியுள்ளார். பிரவீன் வைத்திருந்த லென்ஸை மொபைல் கேமராவில் பொருத்தினால், தூரத்தில் உள்ள காட்சிகளைக்கூட தெளிவாகப் படம் பிடிக்கலாம் என்றுக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பிரவீனின் மனைவி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உதவி செவிலியராகப் பணிபுரிந்துவருகிறார். தினமும் மனைவியை மருத்துவமனைக்குக் கொண்டுவந்து விடுவதையும் அழைத்துச் செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனால், செவிலியர்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட பகுதிகள் பிரவீனுக்கு நன்கு தெரியும் என்பதால், இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
செவிலியர்கள் அறையில் உடைமாற்றுவதை வீடியோ எடுத்ததாகப் பிரவீன் மீது புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
