'ஏன் அப்பா இப்படி செஞ்சீங்க'?... 'குடும்பமே இப்படி உருக்குலைந்து போச்சே'... நெஞ்சை பிழியும் சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jan 04, 2020 10:48 AM

திருமணத்தை மீறிய உறவால், ஒரு குடும்பமே சிதைந்து போயுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சோகத்தியும் ஏற்படுத்தியுள்ளது.

Couple Set Themselves and Daughter Ablaze Over \'Illicit\' Relationship

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா தலவட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனியார் பஸ் ஏஜண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில், அவர் தனியாா் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியின் மகள் அம்ருதா, இரியூரில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இதனிடையே நேற்று காலை  7.30 மணி அளவில் அருண்குமாரின் வீட்டில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியானது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அருண்குமாரின் வீட்டில் தீ பிடித்து விட்டது என எண்ணி, தீயை அணைக்க விரைந்துள்ளார்கள். அப்போது திடீரென வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறி போன அவர்கள், வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அருண்குமார், அவரது மனைவி லதா மற்றும் அவர்களது மகள் அம்ருதா ஆகியோரின் உடல்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்டு உறைந்து போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு இரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்கும், மருத்துவமனைக்கும்  சென்று விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து அருண்குமாரின் வீட்டின் அருகே வசிப்பவர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.

அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.  அதில் தனியார் பஸ் ஏஜண்டாக இருக்கும் அருண்குமார் பல பெண்களுடன் பழகி வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி லதாவுக்கு தெரியவர, கணவனுக்கும் மனைவிக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் அருண்குமாரின் மகளும் இந்த சண்டையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே நேற்று காலையும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, மகள் அம்ருதாவின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். பின்னர் அவர்கள் தங்களது உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டனர். இதில் அவர்கள் 3 பேரும் உடல் கருகி பலியானது தெரியவந்தது. நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தவறான பாதையால் ஒரு குடும்பமே உருக்குலைந்து போயுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KARNATAKA #SUICIDEATTEMPT #KILLED #CHITRADURGA #FIRE #ILLICIT #COUPLE